ஏமனின் ‘ஸ்பைடர்மேன்’ காலமானார்

ஏமனின் ‘ஸ்பைடர்மேன்’ காலமானார்

1 mins read
எரிமலைக் குழிக்குள் விழுந்து உயிரிழந்தார்
1954e0a8-2fa5-4d46-b944-63b835b7f1a1
‘ஏமனின் ஸ்பைடர்மேன்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட சாகச வீரர் அல்-கக்கா இபின். - கோப்புப் படம்: எக்ஸ்ட்ரீம்ஸ்போர்ட்லர்

ஏமன்: அபாயகரமான உயரங்களைக் கடந்துவந்த ஆடவர் ஒருவர் மாண்டுவிட்டார்.

ஏமனின் தென்பகுதியிலுள்ள எரிமலை ஒன்றின் மேடான பகுதியில் ஏறியபோது அவர் எரிமலைக் குழிக்குள் விழுந்து உயிரிழந்தார். அச்சம்பவம் காணொளியில் படமெடுக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டது.

‘ஏமனின் ஸ்பைடர்மேன்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட அல்-கக்கா இபின் அந்தார், 30, இம்மாதம் 12ஆம் தேதி உயிரிழந்தார். ‘ஹர்டா டாம்’ எரிமலையின் 120 மீட்டர் ஆழம்கொண்ட குழியில் விழுந்து அவர் உயிரிழந்தார்.

அந்த எரிமலை ஏமனின் டாலே மாநிலத்தில் அமைந்துள்ளது.

அந்தார், ஏமனின் ஆகச் சவாலான பகுதிகளை ஏறுவது அல்லது அவற்றில் சாகசங்களைப் புரிவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் புகழ்பெற்றார். அவர் கயிறு, பாதுகாப்புக் கவசம் ஆகியவை ஏதும் இல்லாமல் சாகசங்களைப் புரிந்துவந்தார்.

சமூக ஊடகங்களில் அவருக்கு ரசிகர் பட்டாளம் குவிந்தது. தனது சாகசங்கள் பதிவான படங்களையும் காணொளிகளையும் அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துவந்தார்.

அந்தாரின் உடல், நீர் நிறைந்த எரிமலைக் குழிக்குள் 30 மீட்டர் ஆழத்தில் இம்மாதம் 13ஆம் தேதி மீட்கப்பட்டது. நாலரை மணிநேர தேடலைத் தொடர்ந்து அவரின் உடல் மீட்கப்பட்டதாக ஏமன் குடிமைத் தற்காப்பு ஆணையம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
உலகம்ஏமன்சாகசம்உயிரிழப்புஎரிமலைவிபத்து

தொடர்புடைய செய்திகள்