சிண்டா செதுக்கும் எதிர்காலத் தலைவர்கள்

மேம்பாடே குறிக்கோள், அக்கறையே அடையாளம்

4 mins read
c3fdb734-cd57-4320-a6ba-c90245c53012
(இடமிருந்து) ரக்‌ஷனா பாண்டியன், 19, சேவியர் ரமணா, 22, ஸ்ம்ருதி ஸ்ரீவத்சன், 16 ஆகியோருக்கு சிண்டாவின் இளையர் விருது வழங்கப்பட்டது. - படம்: சிண்டா

சமூக மேம்பாட்டைத் தங்களின் குறிக்கோளாகவும் சமூகம் சார்ந்த அக்கறையைத் தங்களது அடையாளமாகவும் கொண்டுள்ள 150 இளையர்களுக்கு, அண்மையில் சிண்டா எனப்படும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கம் விருதளித்துச் சிறப்பித்தது.

விருது பெற்ற ரக்‌ஷனா பாண்டியன், சேவியர் ரமணா, ஸ்ம்ருதி ஸ்ரீவத்சன் ஆகியோர் தங்களது லட்சியப் பயணத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்டனர்.

திறன்களை ஒளிரச் செய்தல் 

அண்மையில் நடந்து முடிந்த சிண்டாவின் 11வது வருடாந்தர ‘இளையர் விருது விழா’வில் தலைசிறந்த பட்டதாரியாக தேர்வானவர் ரக்‌ஷனா பாண்டியன், 19.

சிண்டாவின் ‘ஸ்டெப்’ துணைப்பாட வகுப்பில் 2018ஆம் ஆண்டு தம் பெற்றோர் இணைத்து[Ϟ]விட, அன்றிலிருந்து துவங்கியது இவரது சாதனைப் பயணம்.

“வீட்டுப்பாடம் செய்வதிலேயே எனது வாரயிறுதிகள் முன்பெல்லாம் செலவழிந்துவிடும். அதை மாற்றியது சிண்டாதான். எனக்குள் மறைந்திருக்கும் ஆற்றலை நானே அடையாளம் காணத் தொடங்கினேன்.

உதாரணமாக, சிண்டாவில் இணைந்ததன் வழி தீபாவளிப் பண்டிகையின்போது எளி[Ϟ]யோருக்கு அன்பளிப்பு தரும் நடவடிக்கையில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

மற்றவர்களுக்கு அன்பளிப்பு தரும்போது உண்டாகும் மனநிறைவை முதன்முறையாக நான் உணர்ந்தேன்,” என்று விவரித்தார் ரக்‌ஷனா.

தொண்டூழியம் புரிவதன் வழி[Ϟ]யாக ஏற்பட்ட தாக்கம் குறித்துப் பேசிய குமாரி. ரக்‌ஷனா, அதன்மூலம் அநேக மக்களுடன் கலந்துரையாட முடிகிறது எனவும் பற்பல சிந்தனைகள் உருவாக்கம் காண்கிறது. இதனால் தானும் பயன்பெற்று பிறருக்கும் பயன் தருபவராகத் திகழ முடி[Ϟ]கிறது, என்றார்.

“சிண்டாவின் இளையர் நலன் சார்ந்த பல்வேறு நிகழ்வு[Ϟ]களில் தொடர்ந்து பங்குபெற்றதன் மூலம் குழுவுணர்வு, குழு[Ϟ]வைக் கட்டமைத்தல், உரையாற்றுதல் தொடர்பான திறன்கள், குறியீட்டு முறை சார்ந்த திறன்கள் உள்ளிட்டவற்றை அறிந்தேன். தலைமைத்துவ பண்புகளுடன் என்னை ஒரு தன்னார்வலராகவும் செதுக்கி வருகிறது சிண்டா,” என்று குறிப்பிட்டார் அவர்.

சிண்டாவின் ஒவ்வொரு நடவடிக்கைக்குப்பின் அடங்கியுள்ள உழைப்பு, தானும் தன்னால் இயன்ற பங்கைச் சமூகத்திற்கு ஆற்ற வேண்டும் என்ற உணர்வைத் தனக்கு ஊட்டிக்கொண்டே இருப்பதாகச் சொன்னார் ரக்‌ஷனா.

இலக்கை அடைய வாய்ப்பு 

ஒரு குறுகிய வட்டத்திலிருந்த தமக்குப் பற்பல வாய்ப்புகளை வளமாக வழங்கிய தளம் சிண்டா என்று சிண்டா இளையர் விருதைப் பெற்ற சேவியர் ரமணா, 22, குறிப்பிட்டார்.

நண்பர் ஒருவர் 2022ஆம் ஆண்[Ϟ]டில் ‘சிண்டா எம்பவர்மென்ட் முகாமில்’ சேரும்படி கூற, அதிலிருந்து சிண்டாவுட[Ϟ]னான இவரது பயணம் தொடங்கியது.

“சனிக்கிழமைகளில் இத்தகைய நிகழ்வுகளுக்குப் போக வேண்டுமா? என்று யோசித்திருக்கிறேன். இங்கு வரும்வரை பெரிதாக ஒரு நோக்கமும் எனக்கு இருந்ததில்லை.

“ஆனால் வந்தபிறகு இங்குள்ள வழிகாட்டிகள், பயிற்றுவிப்பாளர்கள், சக இளையர்கள் என வெவ்வேறு தரப்பினரிடமிருந்து நான் ஊக்கத்தைப் பெற்றேன். தொண்டூழியம் சார்ந்த நடவடிக்கைகளின் மூலம் பிறருக்குப் பலன் கிடைக்கிறது என்பதை உணரத் தொடங்கினேன்.

“இவ்வாறு சமூகத்தில் ஆக்ககரமான மாற்றத்தை விதைக்க நாம் பங்கு வகிக்கிறோம் என்பது சமூகத்திற்குச் சேவையாற்ற வேண்டும் எனும் இலக்கை என்னுள் விதைக்கத் தொடங்கியது,” என்று கூறினார் சேவியர்.

சவால்கள் ஏற்பட்டாலும் அவற்றைக் கடந்து வருகையில் அவை சிறந்த கற்றல் அனுபவங்களாக மாறிவிடுவதாகச் சொன்னார் சேவியர்.

“அமைச்சர்கள், தலைவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடும் வாய்ப்புகள் இங்கு இளையர்[Ϟ]களுக்குக் கிடைக்கிறது.

வருங்கால தலைவர்களாக, சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தைத் தருபவர்களாக என்னைப் போன்றோரை உருவாக்க இத்தகைய தருணங்கள் உதவுகின்றன,” என்றார் அவர்.

இளையர் விருது தமது பங்களிப்புக்காகக் கிடைத்த பாராட்டு என்று குறிப்பிட்ட சேவியர், தாம் ஆற்றிய செயல்கள் அனைத்தும் கல்வியைப் போலவே முக்கியம் வாய்ந்த பங்களிப்பு என்பதை இவ்விருது உறுதிப்படுத்துவதாகக் கூறினார்.

உதவுவதில் உவகை

தேவையுள்ளோருக்கு உதவவும் இனம், கலாசார நல்லிணக்கம் அடிப்படையிலான கலந்துரையாடல்களில் பங்கேற்கவும் வாய்ப்புகள் கிடைப்பதைத் தமது அறிவாற்றலைத் தூண்டும் தருணங்களாக சிண்டாவின் இளையர் விருதைப் பெற்ற ஸ்ம்ருதி ஸ்ரீவத்சன், 16, கருதுகிறார்.

“உலகில் தலைசிறந்து விளங்க வேண்டும் என்று இளையர்கள் விரும்பினால், அவர்[Ϟ]களுக்கான தளங்களை சிண்டா அமைத்துத் தருகிறது,” என்றார் அவர்.

இளையர் மன்றத்தின் பல்வேறு அமைப்புகளில் இணைந்து செய்யும் சிறு செயல்களும் மற்றவர்களின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை அனுபவ[Ϟ]ரீதியாக உணர்ந்ததாகக் கூறினார் ஸ்ம்ருதி.

“அண்மையில் கம்போடியாவிற்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்தேன். எனக்கு அது சிறிய செயலாகத் தோன்றினாலும் அங்குள்ளவர்கள் அதற்கு நன்றி தெரிவித்த விதம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

“சமூகத்தில் உள்ளவர்களுக்காக நாம் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் அதனால் ஏற்[Ϟ]படும் மாற்றம் சக்திவாய்ந்தது என்பதைப் புரிந்து கொண்டேன்,” என்றார் அவர்.

சமூக அக்கறை கொண்டு புரியும் ஒவ்வொரு செயலும் முக்கியம். அது தொண்டூழியத்[Ϟ]தின் வலிமையை உணர்த்த வல்லது என்றார் இளையர் ஸ்ம்ருதி.

குறிப்புச் சொற்கள்