தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடியைத் தடுத்தது 10 நொடி இடைநிறுத்தம்

3 mins read
போலி காவல்துறை அதிகாரிகள் அவரை உடனடியாகச் செயல்பட அழுத்தம் கொடுத்தாலும் வங்கிச் செயலியின் எச்சரிக்கைத் தகவல் அவரை இருமுறை சிந்திக்க வைத்தது.
ea0000e3-135b-481c-befc-3fa412d75f91
ஓவியம். - படம்: கெட்டி இமேஜஸ்

10 நொடி இடைவெளி, அவரை ஐந்து இலக்கத் தொகை இழப்பிலிருந்து காப்பாற்றியது.

சிங்கப்பூரில் 2024 ஆம் ஆண்டு அரசாங்க அதிகாரிகள்போல ஆள்மாறாட்டம் செய்து நடைபெற்ற மோசடிகளால் மட்டும் $151.3 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

அவர், தமது வங்கிக் கணக்கிலிருந்து ஐந்து இலக்கத் தொகையை - ஏறத்தாழ கணக்கில் இருந்த மொத்தத் தொகையையும் மோசடிப்பேர்வழிக்குச் சில நொடிகளில் அனுப்பத் தயாராக இருந்தார். 

ஆனால் அவரது வங்கிச் செயலியுன் ‘பே நவ்’ அம்சத்தில் உதித்த எச்சரிக்கைச் செய்தி அவரைச் சரியான கணத்தில் தட்டி எழுப்பியது. 

“நீங்கள் நம்பும் ஒருவருக்கே பணம் அனுப்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்,” என்றது அச்செய்தி.

அப்போதுதான் இது மோசடியாக இருக்கலாம் என்பதை உணர்ந்தாகக் குறிப்பிட்டார் திருவாட்டி ஜூலி, 32. “நான் ஏன் ஒரு காவல்துறை அதிகாரிக்குப் பணம் அனுப்புகிறேன்? இது அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது.”

சிங்கப்பூர்க் காவல்துறையின் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரியெனத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஒருவரது எண்ணை அவர் உள்ளீடாக அளித்திருந்தார்.

அந்த “மூத்த கண்காணிப்பாளர் லாவ்” ஜூலியின் பணம் சிங்கப்பூர் நாணய ஆணையத்தில் ஏழு முதல் பதினான்கு நாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்து பின்னர் அவரது வங்கிக் கணக்கிற்கே திருப்பி அனுப்பப்படும் என்று தெரிவித்தார். 

மூன்று போலிக் காவல்துறை, வங்கி அதிகாரிகளுடன் கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் தொலைபேசியில் பேசினார் ஜூலி.

கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் சொத்து முகவரான ஜூலிக்குத் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. தமது பணியில் புதிய எண்களிலிருந்து அழைப்பு வருவது இயல்பானதுதான் என்றார் அவர்.

இரு போலி நீதிமன்ற உத்தரவுகளுடன் கூடிய விரிவான ஏமாற்றுக் கதையினால், பணமோசடிக் குற்றத்தின் தொடர்பில் தாம் விசாரணைக்கு ஆட்பட்டிருப்பதாக நம்பினார் ஜூலி.

சுயபடம் எடுக்கச் சொல்வது உள்பட உள்ளூரப் பல்வேறு எச்சரிக்கை மணி ஒலித்தபோதும், மோசடிப் பேர்வழிகளின் தந்திரங்களால் ஜூலி அவர்களின் போலி மிரட்டல்களை நம்பினார்.

“எல்லாமே உண்மைபோலத் தோன்றின,” என்ற அவர் “என்னப் பயமும் பதற்றமும் பீடித்திருந்தது,” என்றார்.

பின் சுதாரித்துக்கொண்ட ஜூலி, “மூத்த கண்காணிப்பாளர் லாவ்வின்” தொடர்பைத் துண்டித்துவிட்டு தமது நலன்விரும்பியை அழைத்தார். அவரும் சந்தேகத்தை உறுதிசெய்யவே, ஜூலி தமது தாயாருடன் சென்று காவல்துறையில் புகாரளித்தார்.

பயத்தை அதிகரித்தல்

திருவாட்டி ஜூலிக்கு ஏற்பட்ட பயம், குழப்பம், ஏமாற்றத்துக்கு ஆளாக வேண்டிய அழுத்தம் ஆகியவை மோசடிப் பேர்வழிகள் பயன்படுத்தும் பொதுவான தந்திரம் ஆகும்.

மோசடிப் பேர்வழிகள் காவல்துறை அதிகாரி, வங்கி ஊழியர்கள், பிற நாட்டு அமலாக்கத் துறை அதிகாரிகள்போல ஆள்மாற்றாட்டம் செய்து பணத்தைப் பிடுங்குகின்றனர். 

மோசடிப்பேர்வழிகள், ஒருவர் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, போலி சான்றுகளையும், ஆவணங்க்களையும் காட்டி மிரட்டி, தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில், “பாதுகாப்புக் காரணங்களுக்காக” பணத்தை வேறு வங்கிக் கணக்கிற்கோ, ‘கிரிப்டோ கரன்ஸி’ கணக்கிற்கோ மாற்றச் சொல்கின்றனர்.

“மோசடிப் பேர்வழிகள் மக்களுக்கு அதிகாரிகள் மேலுள்ள நம்பிக்கை, சட்டங்களுக்கு உட்படும் போக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்,” என்றார் சிங்கப்பூர்க் காவல்துறையின் மோசடிப் பொதுக் கல்வி அலுவலகத் துணை இயக்குநர் ஜெஃப்ரி சின். “பயத்தையும், பதற்றத்தையும் தூண்டி, அழுத்தத்திற்கு ஆளாக்கி, சிந்தனையத் தடுக்கிறார்கள்,” என்றும் சொன்னார்.  

இக்கட்டான சூழலிலிருந்து காக்க விரும்பும் நேர்மையாளர்போலவும் சிலர் நடித்துப் பணத்தை ஏமாற்றி வாங்குகிறார்கள் என்றும் கூறினார்.   

விழிப்புடன் இருங்கள் பாதுகாப்பாக இருங்கள்

திருவாட்டி ஜூலிக்கு நடந்த சம்பவத்தில், அதிகாரிகளின் மீதான நம்பிக்கையைப் பயன்படுத்தி, மன அழுத்ததைத் தூண்டி பிரச்சினையிலிருந்து விடுபடத் தாங்கள் சொல்வதற்கு இணங்க வேண்டுமென வலியுறுத்தினர் மோசடிப்பேர்வழிகள்.  

இவ்வகை அழுத்தங்கள் அவசரச் சூழலைச் சரிசெய்ய சிந்திக்காமல் முடிவெடுக்கக் காரணமாகிறது என்றார் திரு சின்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்? மோசடிப் பேர்வழிகளின் பேச்சு, சூழலிலிருந்து சற்று விலகி, நம்பிக்கையான ஒருவரிசம் ஆலோசனை பெறுங்கள் என்றார்.

“பெரும்பாலும் நமது மூளையின் செயல்பாடுகள் மோசடிக் கதைகளை நம்பக் காரணமாக அமைகிறது,” என்றார் திரு சின். “நாம் அனைவரும் வற்புறுத்தலுக்கு ஆளாகிறோம்,” என்றும் சொன்னார். 

பாதுகாப்பாக இருக்கச் சிறந்த வழி எது? எவ்வளவு சிந்தைனைத் திறன் இருந்தாலும், அடிப்படைப் போக்குகளைப் பயன்படுத்தி மோசடிக்கு ஆளாக்கலாம் என்பதை உணர்ந்து விழிப்புடன் இருங்கள்.

பொதுவாகத் தங்களைக் குறித்து நன்கறிந்தவர்கள் விழிப்புடனும், பாதுகாப்புடன் இருப்பார்கள் என்றும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்