சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி, இலக்கியப் பட்டப்படிப்பு

சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி, இலக்கியப் பட்டப்படிப்பு

படம்: எஸ்யுஎஸ்எஸ், ஃபேஸ்புக்

25 Mar 2026 - 6:30 am

2 mins read

தமிழ்மொழியின் ஆழத்தையும் இலக்கியத்தின் செழுமையையும் நவீன கண்ணோட்டத்துடன் கற்க விரும்புவோர்க்குச் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் வழங்கும் இளங்கலைத் தமிழ்மொழி, இலக்கியப் பட்டப்படிப்பு சிறந்த தளமாக அமையும்.

வளர்ந்து வரும் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் கல்வித்துறையில், கல்வியமைச்சில் தமிழாசிரியர் பணி, ஊடகம், அரசுத் துறைகளில் மொழிபெயர்ப்பாளர் பணி, கலைத்துறைகளில் சிறந்த வேலைவாய்ப்புகள் ஆகியவற்றைப் பெற ஏதுவான பட்டப்படிப்பு இது.

சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை, இலக்கணம் முதல் ஊடகத் தமிழ் வரை அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான பாடத்திட்டம். வேலை பார்த்தபடியே படிக்கும் வசதிகள் அமைந்த நீக்குப்போக்கான கற்றலுடன் கூடிய பகுதிநேரப் படிப்பு. இதில், அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள், துறை சார்ந்த வல்லுநர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் மொழி, இலக்கியம் சார்ந்த ஆழ்ந்த திறன்களைப் பெறமுடியும்.

தகுதியுள்ள சிங்கப்பூர்க் குடிமக்களுக்கு 55 விழுக்காடு வரை அரசு மானியம் கிடைக்கும். இதன் மூலம், நாற்பது வயதிற்கு மேற்பட்ட சிங்கப்பூரர்கள் 6,000 வெள்ளி வரையிலும் நாற்பதுக்கும் குறைந்த வயதுடையோர் 15,000 வெள்ளி வரையிலும் இப்படிப்பை நிறைவு செய்யலாம். ஸ்கில்ஸ்பியூச்சர், இதர கல்வி உதவித்தொகைகள் (Bursaries) கிடைக்க வாய்ப்புண்டு.

ஏறத்தாழ 400க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இங்குக் கல்வி கற்று, தமிழ்மொழி, இலக்கியத்தில் ஆழ்ந்த திறன்களைப் பெற்று பாலர் பள்ளி, தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களாகவும், ஊடகத்துறை, அரசுத் துறைகளில் மொழிபெயர்ப்பாளர்களாகவும் பணிபுரிகின்றனர்.

இதற்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31 மார்ச் 2026 மேல்விவரங்களுக்கு: இணையத்தளம்: www.suss.edu.sg மின்னஞ்சல்: student_recruitment@suss.edu.sg தொலைபேசி: +65 6330 9111

குறிப்புச் சொற்கள்
தமிழ்க் கல்விகல்விவேலைவாய்ப்பு