தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகியுள்ள அனஸ்வரா ராஜன், தனது முதல் படத்திலேயே பாராட்டுகளை அள்ளி வருகிறார்.
தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மகன் ரோஷன் நாயகனாக நடித்த ‘சாம்பியன்’ படத்தில், அவருக்கு அனஸ்வராதான் ஜோடி.
தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் பிரதீப் அத்வைதம் இயக்கி உள்ள இப்படத்திற்கு, மிக்கி ஜே மேயர் இசையமைத்துள்ளார்.
முதல் படத்திலேயே மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாக அனஸ்வராவைப் பலரும் பாராட்டியுள்ளனர்.
இந்தப் பாராட்டுகள் எல்லாம் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் சென்று சேர வேண்டும் என்கிறார் அனஸ்வரா.
இயக்குநர் முதல் தொழிலாளர்கள் வரை அனைவரும் நல்ல ஆதரவும் அன்பும் கொடுத்து உற்சாகப்படுத்தியதால்தான் இயல்பாக நடிக்க முடிந்தது என்றும் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

