‘முஃபாசா: தி லயன் கிங்’ படத்தை ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
இந்தப் படத்தை மற்ற உலக மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட உள்ளனர்.
இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஆங்கிலப் பதிப்புக்கு ஹாலிவுட் முன்னணி நடிகர்கள் பின்னணிக் குரல் கொடுத்துள்ளனர்.
இந்திப் பதிப்பில் முஃபாசா கதாபாத்திரத்துக்கு ஷாருக்கான், தெலுங்குப் பதிப்புக்கு மகேஷ் பாபு ஆகிய இருவரும் குரல் கொடுத்துள்ளனர்.
தமிழ்ப் பதிப்புக்கு சூர்யா, விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரை படக்குழுவினர் அணுகியபோது குரல் கொடுக்க மறுத்துவிட்டனராம்.
இந்நிலையில், அர்ஜுன் தாஸ் குரல் கொடுத்துள்ளார். அவரது பரபரப்பான குரல் முஃபாஸா கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்தும் எனப் பலரும் கூறுகின்றனர்.
நடிகர்கள் அசோக் செல்வன், ரோபோ சங்கர், சிங்கம் புலி, விடிவி கணேஷ், நாசர் ஆகியோரும் இப்படத்தின் வெவ்வேறு கதாபாத்திரங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்துள்ளனராம்.

