ஆர்யா, மஞ்சு வாரியர் நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இப்படத்தில் கௌதம் கார்த்திக்கும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படப்பிடிப்பின்போது ஆர்யாவும் கௌதமும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனராம். இப்போதெல்லாம் கௌதம் வாயைத் திறந்தால் ஆர்யா புராணமாகத்தான் உள்ளது.
“இனி என்னோட வழிகாட்டி, முன்மாதிரி என்றால், அது ஆர்யாதான். அவரது உடலை எப்படிக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் தெரியுமா? ‘மிஸ்டர் எக்ஸ்’ படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடந்தபோது, தங்கியிருந்த இடத்தில் உடற்பயிற்சிக்கூடம் இல்லை.
“அதனால், கண்ணில்பட்ட ஊர் மக்களிடம் எல்லாம், ‘உடற்பயிற்சிக் கூடம் எங்கே இருக்கிறது’ என்று விசாரித்துக்கொண்டே இருந்தார். அந்த அளவுக்கு உடல்நலத்தின் மீது அவருக்கு ஆர்வம் உள்ளது,’’ என்று சொல்லிச் சொல்லி வியக்கிறார் கௌதம்.