தாம் எப்போதுமே அனைவரிடமும் ஒளிவு மறைவு இன்றி பேசிப் பழகக்கூடிய பெண் என்று கூறியுள்ளார் நடிகை மீனாட்சி சௌத்ரி.
இந்தக் குணத்தால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானபோதும், தன்னுடைய இயல்பை மாற்றிக்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் ‘சிங்கப்பூர் சலூன்’, ‘கொலை’, ‘கோட்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மீனாட்சிக்கு, தெலுங்கு, இந்தித் திரையுலகிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், அண்மைய பேட்டி ஒன்றில் தனது திரை அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
“என்னைப் பொறுத்தவரை இயக்குநர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி நடிக்கிறேன். கேமராவுக்குப் பின்னால் ஒருபோதும் நடித்ததில்லை.
“அனைவரிடமும் இயல்பாக, ஒளிவு மறைவு இன்றிப் பேசுவதுதான் என் சுபாவம். விமர்சனங்களுக்குப் பயந்து என்னை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. சில ஊடகங்கள் என்னைப் பற்றி பொய்யான தகவல்களை வெளியிடுகின்றன,” என்று மீனாட்சி கூறியுள்ளார்.

