அண்மையில் வெளியான ‘சிறை’ படத்தின் வெற்றி, அதன் நாயகன் விக்ரம் பிரபுவைவிட அவரது குடும்பத்தாருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
படத்தின் வெற்றி ஒருபக்கம் என்றால், நீண்ட திரை இடைவெளிக்குப் பிறகே குடும்பத்துடன் விடுமுறைக்கு வெளிநாடு செல்ல முடிந்ததாம்.
மகன் விக்ரமுக்கு இணையாக, தந்தை பிரபுவும் பல படங்களில் நடித்து வருகிறார். ‘சிறை’ படத்தைப் பார்த்து அவர் தம் மகனை வெகுவாகப் பாராட்டினாராம்.
இருவருக்கும் ஒரே சமயத்தில் குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்க இதுநாள் வரை நேரம் அமையவில்லை. ‘சிறை’ படத்தின் வெற்றியையொட்டி அப்படி ஒரு வாய்ப்பு அமைய, உடனடியாக குடும்பத்துடன் சீனா சென்றுவிட்டார் விக்ரம் பிரபு.
உலகப் புகழ்பெற்ற சீனப் பெருஞ்சுவரில் தொடங்கி, அண்மைய கண்ணாடிப் பூங்காவரை பல்வேறு இடங்களையும் சுற்றிப்பார்த்துவிட்டு இனிமையான நினைவுகளுடன் ஊர் திரும்பியுள்ளனர் சிவாஜி குடும்பத்தினர்.

