சீனாவில் சுற்றுலா: உற்சாகத்தில் பிரபு குடும்பத்தார்

சீனாவில் சுற்றுலா: உற்சாகத்தில் பிரபு குடும்பத்தார்

1 mins read
0dd50aa7-9759-444a-95b8-303a8fd94025
சீனப் பெருஞ்சுவரில் தொடங்கி அண்மைய கண்ணாடிப் பூங்கா வரை அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்து இனிமையான நினைவுகளுடன் ஊர் திரும்பியுள்ளனர். - படம்: விகடன் சினிமா

அண்மையில் வெளியான ‘சிறை’ படத்தின் வெற்றி, அதன் நாயகன் விக்ரம் பிரபுவைவிட அவரது குடும்பத்தாருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

படத்தின் வெற்றி ஒருபக்கம் என்றால் நீண்ட திரை இடைவெளிக்குப் பிறகு குடும்பத்துடன் விடுமுறைக்கு வெளிநாடு செல்ல முடிந்ததாம்.

மகன் விக்ரமுக்கு இணையாக, தந்தை பிரபுவும் பல படங்களில் நடித்து வருகிறார். ‘சிறை’ படத்தைப் பார்த்து அவரும் விக்ரமை வெகுவாகப் பாராட்டினாராம்.

இருவருக்கும் ஒரே சமயத்தில் குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்க இதுநாள் வரை நேரம் அமையவில்லை. ‘சிறை’ படத்தின் வெற்றியையொட்டி அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைய உடனடியாக குடும்பத்துடன் சீனா சென்று விட்டார் விக்ரம் பிரபு.

சீனப் பெருஞ்சுவரில் தொடங்கி, அண்மைய கண்ணாடிப் பூங்கா வரை அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்துவிட்டு இனிமையான நினைவுகளுடன் ஊர் திரும்பியுள்ளனர் சிவாஜி குடும்பத்தினர்.

குறிப்புச் சொற்கள்