‘அறம்‘ திரைப்படத்தின் மூலம் மக்களின் கவனத்தை தன்வசம் ஈர்த்த திரைப்பட இயக்குநர் கோபி நயினார், அடியாள்களை வைத்துத் தம்மை மிரட்டுவதாக உதவி இயக்குநர் வைத்துள்ள குற்றச்சாட்டு திரையுலக வட்டாரத்தில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
திரைத்துறையை தாண்டி அரசியலிலும் ஆர்வம் காட்டிவரும் கோபி நயினார் மீது அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த ராஜ்கமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
‘‘கோபியிடம் நான்கு ஆண்டுகள் வேலை பார்த்தேன். அப்போது செய்த வேலைக்கு ஊதியம் ஏதும் அளிக்கவில்லை. எனக்குத் திருமணம் நடைபெற்றபோதும், உதவி செய்யவில்லை. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து நான் மேற்கொண்டப் பணிகளையும் தடுக்க கோபி தீவிரம் காட்டினார்,’’ எனப் பல்வேறு புகார்களை அளித்துள்ளார் ராஜ்கமல்.
தம்மைப் போன்று பலரையும் அச்சுறுத்தி வரும் கோபி நயினார் மீது வழக்கு தொடுத்துள்ளதாகவும், சட்டப்படி அதற்குத் தீர்வு காணவுள்ளதாகவும் ராஜ்கமல் மேலும் கூறியுள்ளார்.

