கனவு நனவானது: நிதி அகர்வால்

1 mins read
2d3cb09c-4417-477a-bd04-59196a8fb7b9
நிதி அகர்வால். - படம்: நக்கீரன்

பொங்கல் பண்டிகையையொட்டி, நிதி அகர்வால் நடித்துள்ள ‘தி ராஜா சாப்’ திரைப்படம் வெளியீடு காண உள்ளது.

‘பாகுபலி’ பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், ரித்தி குமார், சஞ்ஜய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நிதி அகர்வால், இந்தியாவின் ஆகப் பெரிய நடிகருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது கனவு நனவானதாக கூறினார்.

“பிரபாஸ் எவ்வளவு நல்ல மனிதர் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ரசிகர்களின் அன்பும் ஆதரவும் அவருக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டுமென மனதார வேண்டுகிறேன்.

“இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு நன்றி. எனது சக நடிகைகளான மாளவிகா, ரித்தியுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத இனிய அனுபவம்.

“தமன் இசையமைத்திருக்கும் பாடல்கள் இப்படத்துக்கு கூடுதல் பலம். இப்படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்துக் கொண்டாடுங்கள்,” என்று கேட்டுக்கொண்டார் நிதி அகர்வால்.

குறிப்புச் சொற்கள்