“திடீரென ஒற்றைப் பாடலுக்குக் குத்தாட்டம் போடுகிறீர்கள், பிறகு அடுத்த படத்திலேயே குடும்பப்பாங்காக நடிக்கிறீர்கள் ஏன் இப்படி?” என்று பலரும் தம்மிடம் கேட்பதாகச் சொல்கிறார் தமன்னா.
தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் ‘புருஷன்’ படத்தில் நடித்து வரும் தமன்னா, தெலுங்கு, இந்தியிலும் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.
முன்னணி நடிகர்களின் படம் என்றால் மட்டும்தான் ஒற்றைப் பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொள்கிறார்.
“என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை எனச் சிலர் சொல்வதுண்டு. சில சமயங்களில் என்னை என்னால்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. பிறகு மற்றவர்களால் எப்படிப் புரிந்துகொள்ள முடியும் என்று விளக்கம் அளிக்கிறேன். ஏனெனில் அதுதான் உண்மை,” என்கிறார் தமன்னா.
ஒற்றைப் பாடலுக்கு நடனமாட இந்தியில் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம். அவற்றுள் யார் அதிக சம்பளம் தருகிறார்களோ அந்தப் படத்திற்கு முன்னுரிமை அளிக்கிறார். அதேசமயம் நட்புக்காக இலவசமாக நடிக்கவும் இவர் மறுப்பதில்லை.

