ஒரு நடிகையாக தெலுங்கு முன்னணி நடிகர்களான பிரபாஸ், அல்லு அர்ஜுனை நினைத்து தாம் பெருமைப்படுவதாகக் கூறியுள்ளார் நடிகை ஹன்சிகா.
அண்மைய பேட்டி ஒன்றில், தமது திரைப்பயணத்தின் தொடக்கத்திலேயே இவ்விரு நடிகர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு தமக்குக் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இருவரது படங்களும் மொழித் தடைகளை அகற்றிவிட்டன. அவர்கள் தற்போது பெரிய நட்சத்திரங்களாக இருந்தாலும் பணிவாக இருக்கிறார்கள்,” என்று கூறியுள்ளார் ஹன்சிகா.
கடந்த 2007ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘தேசமுடுரு’ திரைப்படத்தின் மூலம் ஹன்சிகா தெலுங்கில் அறிமுகமானார்.
அதன் பின்னர், 2009ஆம் ஆண்டு பிரபாஸ் நடித்த ‘பில்லா’ படத்தில் ஹன்சிகா கௌரவ வேடத்தில் தோன்றினார்.
திருமணத்துக்குப் பிறகு ஹன்சிகாவை அதிக படங்களில் காண முடியவில்லை. கடைசியாக ‘மை நேம் இஸ் ஷ்ருதி’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

