புற்றுநோய் வலி பலவீனப்படுத்தவில்லை; பலமாக்கியுள்ளது: ஹினா கான்

புற்றுநோய் வலி பலவீனப்படுத்தவில்லை; பலமாக்கியுள்ளது: ஹினா கான்

படம்: தமிழ் பிலிமிபீட்

13 Jun 2026 - 4:16 pm

1 mins read

வாழ்க்கையின் பெரும் துயரத்தையும் அசாத்திய மன உறுதியால் தவிடுபொடியாக்கி, பீனிக்ஸ் பறவையாக மீண்டு வரலாம் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக மாறியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான்.

இந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான இவருக்கு, அண்மையில் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் ஒட்டுமொத்தத் திரையுலகமும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால், புற்றுநோய் பாதிப்பைக் கண்டு ஹினா கான் சற்றும் மனம் தளரவில்லை. கீமோதெரபி சிகிச்சையால் முடி கொட்டுவதற்கு முன்பே, அவரே முன்வந்து மொட்டையடித்துக் கொண்டு புன்னகையோடு இன்ஸ்டகிராமில் ரசிகர்களுக்குத் தைரியம் அளித்தார்.

சோனாலி பிந்த்ரே, மனிஷா கொய்ராலா வரிசையில் அசாத்திய மனவலிமையை அவர் வெளிப்படுத்தினார்.

தற்போது தீவிர சிகிச்சைக்குப் பின் புற்றுநோயை வென்றுள்ள ஹினா கான், ஓய்வெடுக்க விரும்பாமல் நேராக உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

“வலிகள் என்னை பலவீனப்படுத்தவில்லை; மாறாக பலமாக்கியுள்ளன,” எனக் கூறி அவர் வெளியிட்டுள்ள கடுமையான உடற்பயிற்சிக் காணொளிகள் இணையத்தில் பரவி வருகின்றன.

சிகிச்சைக்குப் பின் அவரது தலைமுடி மீண்டும் வளரத் தொடங்கியுள்ள சூழலில், இந்தக் காணொளி லட்சக்கணக்கான புற்றுநோய் நோயாளிகளுக்குப் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது.

பாலிவுட் நடிகை ஹினா கான். 
பாலிவுட் நடிகை ஹினா கான்.  - படம்: தமிழ் பிலிமிபீட்
குறிப்புச் சொற்கள்
நடிகைபுற்றுநோய்மருத்துவம்உடற்பயிற்சி