தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியில் உரிய மரியாதை கிடைக்கிறது: பிரியாமணி

1 mins read
9893eb59-149c-40e4-9095-f4c2b506f96d
‘ஜவான்’ படத்தில் ஷாருக் கான், பிரியாமணி. - படம்: ஊடகம்

இந்தித் திரையுலகமான பாலிவுட்டில் தென்னிந்திய கலைஞர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை எனக் கூறப்படுவதை தம்மால் ஏற்க இயலாது என்கிறார் நடிகை பிரியாமணி.

தாம் இந்திப் படங்களில் நடித்தபோது, தம்மை யாரும் அவமதித்ததில்லை என்றும் உரிய மரியாதை அளித்தனர் என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தித் திரையுலகில் அனைவரும் இயல்பாக உள்ளனர். என்னுடன் நட்பு பாராட்டியவர்கள் எந்தவிதமான பாகுபாடும் காட்டவில்லை.

“உண்மையில் தென்னிந்திய கலைஞர்களுக்கு இந்தித் திரை உலகில் மிகப் பெரிய அளவில் மரியாதையும் வரவேற்பும் அளிக்கின்றனர்.

“என் அனுபவத்தில் அங்கு யாரும் மரியாதைக் குறைவாக நடத்தப்படவில்லை என உறுதியாகச் சொல்வேன்,” என்று கூறி உள்ளார் பிரியாமணி.

அட்லீ இயக்கத்தில் ஹாருக் கான் நடித்த ‘ஜவான்’ படத்தில் நடித்திருந்த பிரியாமணி, அதன் பின்னர் மலையாளத்தில் ‘ஆபீசர் ஆன் டியூட்டி’ படத்தில் நடித்தார்.

தற்போது தமிழில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்