மறைமுகமாக ஊக்கமளிப்பது கூடாது: ராஷ்மிகா

மறைமுகமாக ஊக்கமளிப்பது கூடாது: ராஷ்மிகா

1 mins read
2a7b88fc-68c5-4cd5-b4a5-881e702c88e4
ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா. - படம்: டெக்கான் குரோனிக்கல்

வதந்தி பரப்புவோர் குறித்து தாம் கவலைப்படுவதே இல்லை என்றும் அவர்களுக்கு எந்தவித விளக்கமும் அளிப்பதில்லை என்றும் கூறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

வதந்திகளுக்குப் பதில் அளித்தால் அவற்றைப் பரப்புகிறவர்களுக்கு மறைமுக ஊக்கமளிப்பதுபோல் ஆகிவிடும் என்று அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சிலர் பணத்துக்காக இப்படியெல்லாம் செய்கின்றனர். இதுபோன்ற முகம் தெரியாதவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கிறேன்,” என்று அந்தப் பேட்டியில் ராஷ்மிகா மந்தனா மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபலி’, ‘மைசா’ ஆகிய தெலுங்கு படங்களிலும் இந்தியில் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா.

இதனிடையே, ராஷ்மிகா தனது காதலர் விஜய் தேவரகொண்டாவை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வெளியான தகவல் உண்மைதான் என நெருக்கமான தோழிகள் பலர் கூறி வருகின்றனர். இதை ராஷ்மிகாவும் மறுக்கவில்லை.

இந்நிலையில், இத்திருமணத்துக்கான ஏற்பாடுகள் சத்தமின்றி நடைபெற்று வருகின்றனவாம்.

திருமணத்துக்கான பூக்கள் சுவிட்சர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காகப் பல லட்சங்கள் செலவாகும் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்