வயது குறித்து தாம் என்றுமே கவலைப்பட்டதோ, அதிகம் யோசித்ததோ இல்லை என்கிறார் இந்தி நடிகை கங்கனா ரணவத்.
தனது மனம் ஆன்மிகத்தால் நிறைந்திருப்பதே இதற்குக் காரணம் என அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நான் சார்ந்துள்ள திரையுலகில் சிலர் தலையில் வெள்ளை முடி வந்துவிட்டால், அதைக் கண்டு பயன்படுகிறார்கள். அப்படிப்பட்ட மக்களை தினமும் சந்திக்கிறேன்.
“ஆனால் அரசியலில் அப்படி இல்லை. அரசியல் களத்தில் வயதாவதும் ஒருவித மகிழ்ச்சிதான்,” என்று கூறியுள்ளார் கங்கனா.
கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான ‘கேங்ஸ்டர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கங்கனா ரணவத். ரவிமோகன் நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அண்மையில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவான ‘எமர்ஜென்சி’ படத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

