உற்சாகத்தில் மிதக்கும் கயாது

உற்சாகத்தில் மிதக்கும் கயாது

1 mins read
26f970cf-9d7b-4b02-9b7a-64a5a3dc2d86
கயாது லோஹர். - படம்: சௌத் இந்தியன் ஆக்டிரஸ்.இன்

பிரதீப் ரங்கநாதனுடன் ‘டிராகன்’ படத்தில் நடித்த பிறகு, தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்த நடிகையாகிவிட்டார் கயாது லோஹர்.

அண்மையில் சாய் அபயங்கர் இசையில் வெளியான ‘பவழ மல்லி’ பாடல் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அதில் கயாதுவின் நடனம் அசத்தல் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனால் உற்சாகத்தில் மிதக்கும் கயாதுவுக்கு, தாம் மலையாளத்தில் நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ படம் வெளியாகி இருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளித்துள்ளது.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று தென்னிந்திய மொழியிலும் நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம்.

நானியுடன் ‘தி பாரடைஸ்’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கயாது.

தமிழில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ‘இம்மார்டல்’ படத்தில் நடித்து வருகிறார். மாரியப்பன் சின்னா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்