தனுஷைப் போல் நடிக்கக்கூடிய திறமைசாலிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்று பாராட்டுகிறார் பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான கிரித்தி சனோன்.
இவரும் தனுஷும் ‘தேரே இஷ்க் மே’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
“நாங்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம் இது. மிகவும் இயல்பாக, உடனடியாக அனைத்தையும் புரிந்துகொள்கிறார் தனுஷ்.
“எத்தகைய கடினமான காட்சியாக, வசனங்களாக இருந்தாலும் ஒரே ‘டேக்கி’லேயே நடித்து அசத்துகிறார். இப்படிப்பட்ட ஒரு நடிகரை இதுவரை நான் பார்த்ததே இல்லை,” என்று கிரித்தி சனோன் பாராட்டித் தள்ளியதில் உச்சிகுளிர்ந்து போயுள்ளார் தனுஷ்.
அடுத்தாண்டு தீபாவளிக்குள் ஒரு படத்தை இயக்கி, நாயகனாகவும் நடிக்க முடிவு செய்துள்ள தனுஷ், அதில் கிரித்தி சனோனைத்தான் நாயகியாக நடிக்க வைப்பார் எனக் கூறப்படுகிறது.