தெலுங்கு இயக்குநர் சேகர் கமுலா இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்தின் குறு முன்னோட்டக்காட்சித் தொகுப்பு நவம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது.
தனுஷின் 51வது படமாக உருவாகும் இதில், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது என்றும் படத்தின் டீசர் ரசிகர்களால் பெரிதும் பேசப்படும் என்றும் இயக்குநர் சேகர் கமுலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.