இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ள படங்களைப் பற்றி பார்க்கலாம்.
1. சக்தித் திருமகன்
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘சக்தித் திருமகன்’ படம் அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகிறது.
அருண் பிரபு எழுதி இயக்கிய அப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.
2. ஓஜி
ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் நடிப்பிலும் சுஜித் இயக்கத்திலும் உருவான படம் ‘தே கால் ஹிம் ஓஜி’.
இந்தத் திரைப்படத்தை அக்டோபர் 23ஆம் தேதி, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் காணலாம்.
3. பரம் சுந்தரி
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 24ஆம் தேதி, சித்தார்த் மல்ஹோத்ரா, ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான மலையாளப் படமான ‘பரம் சுந்தரி’ வெளியாகிறது.
4. மிராஜ்
சோனி லைவ் ஓடிடியில் ஜீத்து ஜோசப் இயக்கிய ‘மிராஜ்’ திரைப்படத்தைப் பார்க்கலாம்.
அபர்ணா பாலமுரளி அப்படத்தின் நாயகி. ஏற்கெனவே, ஆசிப் அலியும் அபர்ணா பாலமுரளியும் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளனர். அவர்களின் கூட்டணியில் இது ஆறாவது திரைப்படம்.
தொடர்புடைய செய்திகள்
5. தணல்
நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான ‘தணல்’ படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம். அப்படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கியுள்ளார்.

