அண்மைக்காலமாக பூஜா ஹெக்டே முகத்தில் பழைய பொலிவையும் உற்சாகத்தையும் பார்க்க முடிகிறது.
காரணம் மீண்டும் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் புது வாய்ப்புகள் பல தேடி வருகின்றனவாம்.
தமிழில் ‘பீஸ்ட்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற பின்னர், சற்றே சோர்வடைந்திருந்தார் பூஜா. தற்போது கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சூர்யாவின் 44வது படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் விஜய்யின் 69வது படத்திலும் இணைந்துள்ளார்.
இதையடுத்து, இந்தியில் வருண் தவானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். இதை டேவிட் தவான் இயக்குகிறார் என அதிகாரபூர்வமாக அறவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெலுங்கில் இரண்டு முன்னணி நாயகர்களுடன் நடிக்கவும் பூஜாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதனால்தான் பூஜா முகத்தில் இப்போதெல்லாம் எந்நேரமும் அழகுச் சிரிப்பைக் காண முடிகிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.