தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் பிரியங்கா மோகன். தனது நடிப்புக்காக ரசிகர்களிடம் பெரிதாகப் பாராட்டுகளை அவர் பெறவில்லை. இதனால், தனது கவனத்தை மலையாளத் திரையுலகின் பக்கம் பிரியங்கா திருப்பியுள்ளார்.
தற்போது, துல்கர் சல்மான் நடிக்கும் ஒரு புதிய படத்தில் நாயகியாக அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
மலையாள மொழியில் தான் நடிக்கும் முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரம் தனக்கு கிடைத்திருப்பதாக பிரியங்கா தனது நெருங்கிய வட்டாரத்தில் பெருமையாகக் கூறியுள்ளார்.
இந்தப் படத்தின் மூலம் தனக்குள் இருக்கும் சிறந்த நடிகையை வெளிக்கொண்டு வந்து, முன்னணி இயக்குநர்களின் கவனத்தைத் தன்பக்கம் திருப்புவேன் என்கிறார் பிரியங்கா மோகன்.