மொழிகளைக் கற்பதில் ஆர்வம் காட்டும் ராஷி கண்ணா

2 mins read
5ffa4d44-e61f-459a-9316-04240e493db3
ராஷி கண்ணா. - படம்: ஃபில்மீபீட்
multi-img1 of 2

தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘அடங்​கமறு’, ‘திருச்​சிற்​றம்​பலம்’, ‘அரண்​மனை 4’, ‘சர்தார்’ உள்ளிட்ட படங்​களில் இந்தி நடிகையான ராஷி கண்ணா நடித்துள்ளார்.

தெலுங்​கு, மலை​யாளப் படங்​களி​லும் அவர் நடித்து வரு​கிறார்.

மொழிகளைக் கற்பது தமக்கு மிகவும் பிடிக்கும் என அண்மையில் ராஷி அளித்த நேர்காணல் ஒன்றில் கூறினார்.

மேலும், அதை ஒரு பணியாகவே மேற்கொள்வதாகவும் இந்​தி, ஆங்​கிலத்தையடுத்து தெலுங்​கு, தமிழ் ஆகிய மொழிகளில் நன்கு பேசத் தெரியுமெனவும் அவர் தெரிவித்தார்.

பஞ்​சாபி, பெங்​காலி​ போன்ற மொழிகளைத் தற்போது கற்று வருவதாகச் சொன்ன ராஷி, ஒவ்​வொரு மொழியிலும் சிறந்த கதா​பாத்​திரங்​களில் நடிக்க வேண்டும் என்​பது தனது விருப்பம் என்றார்.

“படங்களில் கதா​பாத்​திரங்​கள்​தான் முக்​கி​யம். அங்கு மொழி இரண்​டாம் பட்​சம்​தான் என்றாலும் பார்​வை​யாளர்​களு​டன் தொடர்புகொள்ள அம்​மொழியைக் கற்​றுக்​கொள்​வது அவசி​யம் என நினைக்கிறேன். அதனாலேயே எந்த மொழி​யில் நடித்தாலும் அதைக் கற்​றுக்​கொள்​கிறேன்,” என அவர் கூறினார்.

ஒவ்​வொரு​வரும் சிறந்த படத்​தைக் கொடுக்க வேண்​டும் என்​ற எண்ணத்துடன்தான் திரையுலகில் பயணிப்பதாகவும் அனை​வரும் இந்​தியத் திரைத்துறைக்குச் சிறந்த பங்​களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதனால், பல்​வேறு மொழிகளில் பணியாற்றி​னாலும் எந்த வித்​தி​யாசத்​தை​யும் நான் பார்க்க​வில்​லை என்றார்.

“ரன்​பீர் கபூர், விக்கி கவுஷல் ஆகியோர் வித்​தி​யாசமான கதைகளைத் தேர்வு செய்து நடிக்கின்றனர். ​அவர்களுடன் இணைந்து பணியாற்ற நான் விரும்புகிறேன். இயக்​குநரைப் பொறுத்​தவரை சஞ்​சய் லீலா பன்​சாலி இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும். அவருடைய படங்களில் பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்கப்படும்,” என ராஷி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்