‘பிக்பாஸ்’ புகழ் ஆரவ், ‘விடாமுயற்சி’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் பிப்ரவரி 5ஆம் தேதி வெளியீடு காண உள்ள நிலையில், சூட்டோடு சூடாக அவர் ஏற்கெனவே நடித்து முடித்துள்ள ‘ராஜபீமா’ படம் வெளியாகிறது.
இதில் ஆரவ் நாயகனாகவும் யாஷிகா ஆனந்த், ஆஷிமா நர்வால் நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.
இதில் கவனிக்கத்தக்க தகவல் என்னவென்றால் இந்தப் படத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியில் மொழிமாற்றம் செய்து யூடியூப் தளங்களில் வெளியிட்டனர். அப்படி வெளியான ஒரு படத்தை தற்போது திரையரங்குகளில் வெளியிடுகின்றனர்.
கடந்த 2019 ஆண்டிலேயே இப்படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்பு வெளியிடப்பட்டது. இத்தனை ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு தமிழில் வெளியாகிறது. இன்று முதல் திரையரங்குகளில் இப்படத்தைக் காணலாம்.


