நட்சத்திர ஜோடியான விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ‘ரணபாலி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் சாங்கிருத்தியன் இயக்கத்தில், 1870களின் பின்னணியில் உருவாகியுள்ள அப்படம், ஆங்கிலேயர் ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் ஒரு கிளர்ச்சிப் போராளியின் வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இதில் ‘ரணபாலி’ என்ற கிராமத்துப் போர்வீரனாக விஜய் தேவரகொண்டாவும் ‘ஜெயம்மா’ எனும் சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் கூட்டணித் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அஜய், அதுல் இசையமைத்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தொடக்கத்தில் அப்படம் செப்டம்பர் 11ஆம் தேதி வெளியீடு காணும் எனக் கூறப்பட்டது. எனினும் இப்போது அத்திட்டத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தசரா பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 16ஆம் தேதியன்று, உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்தின் ‘எந்தையா சாமி’ என்ற பாடல் இணையத்தில் ரசிகர்களால் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.


