உடல்நலப் பாதிப்பு காரணமாக நடிகர் ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒருசில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டதன் பலனாக, மெல்ல மீண்டு வந்தார் ரோபோ சங்கர்.
உணவுக் கட்டுப்பாடு மிகவும் முக்கியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த அவருக்கு, திடீரென மயக்கம் ஏற்பட்டதாகவும், முன்னதாக அவர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கவலைப்பட ஒன்றுமில்லை என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்னர். எனினும், சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் பல்வேறு தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.