தாய்லாந்து சுற்றுலாத்துறையின் அதிகாரபூர்வ விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்தி நடிகர் சோனு சூட்.
தமிழில் ‘கள்ளழகர்’, ‘ஒஸ்தி’, ‘அருந்ததி’, ‘தமிழரசன்’ உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் ஏழை மக்களுக்குச் செய்த பல உதவிகளால் இந்தியா முழுவதும் பிரபலமானார் சோனு.
பல இடங்களில் அவருக்கு கோவில்கள்கூட கட்டப்பட்டன. அவர் தனது சமூகச் சேவையைத் தொடர்ந்து வரும் நிலையில், தாய்லாந்து அரசு அவரை அந்நாட்டின் அதிகாரபூர்வ சுற்றுலாத்துறை தூதுவராக அறிவித்துள்ளது.
தாய்லாந்து சுற்றுலாத்துறையை இந்தியாவில் மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் அவர் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, தாய்லாந்து அரசுக்கு சோனு சூட்டும் அவரது ரசிகர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.