மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கும் ஸ்ரீலீலா

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கும் ஸ்ரீலீலா

1 mins read
fa81a2de-4ef1-4f26-895c-59c532a7a45e
ஸ்ரீலீலா. - படம்: தி சியாசத் டெய்லி

நடிகை ஸ்ரீலீலாவின் வீட்டில் பண, வாய்ப்பு மழை கொட்டுகிறது.

அவரும் அன்னதானத்தில் தொடங்கி, ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவி, தெரிந்தவர்கள், உறவினர்கள் மகள்களின் திருமணத்திற்கு உதவி என்று காசை எண்ணிப் பார்க்காமல் அள்ளிக்கொடுக்கிறார்.

ஆனால் வருவதைவிட போவது குறைவாக இருப்பதால் இப்போது ஒரு பெரிய திட்டத்தில் இறங்கிவிட்டாராம்.

விசாகப்பட்டினத்தில் தனது தாயாரின் பெயரில் 500 படுக்கைகள் கொண்ட பிரம்மாண்ட மருத்துவமனை, ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணியை தொடங்கிவிட்டாராம் ஸ்ரீலீலா.

தாம் படித்த மருத்துவப் படிப்புக்குப் பலனும், ஏழை எளிய மக்களுக்கு உதவியாகவும் இருக்கும் என்றுதான் இந்த ஏற்பாடாம்.

திரையுலகினருக்குச் சிறப்புச் சலுகை உண்டு என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலீலாவின் நல்ல மனத்தைப் பலரும் வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்