துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக மூன்று நாயகிகளை ஒப்பந்தம் செய்ய உள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற ‘கில்’ என்ற படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் மறுபதிப்பு செய்ய இயக்குநர் ரமேஷ் வர்மா முடிவு செய்துள்ளார்.
இதற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில், நாயகனாக துருவ் விக்ரம் நடிப்பது உறுதியாகி உள்ளது.
‘உறியடி’ பட நாயகன் விஜயகுமாரை வில்லனாக ஒப்பந்தம் செய்ய உள்ளதாகத் தகவல். மேலும், கயாது லோஹர், அனுபமா பரமேஸ்வரன், கேதிகா சர்மா என மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
‘கில்’ இந்திப் படத்தில் ஒரு கதாநாயகிதான். ஆனால், மறுபதிப்பில் மூன்று கதாநாயகிகள் என கதையில் மாற்றங்களைச் செய்திருப்பதாகத் தெரிகிறது.