வாசகர் வட்டத்தின் ஆண்டு விழா

வாசகர் வட்டத்தின் ஆண்டு விழா

1 mins read
09ed7602-55c1-4bc7-b8ef-1669ece35a90
நிகழ்ச்சி, சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் 16ஆம் தளத்தில் உள்ள ‘தி பாட்’ அரங்கில் செப்டம்பர் 12ஆம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெறவிருக்கிறது.   - படம்: வாசகர் வட்டம்
Google News Preferred Icon

வாசகர் வட்டத்தின் ஆண்டு விழா 2026 மற்றும் நூல் வெளியீடுகள் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி மாலை 6 மணி அளவில் சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் 16ஆம் தளத்தில் உள்ள ‘தி பாட்’ அரங்கில் நடைபெறவிருக்கிறது.  

தமிழ்த் திரைப்பட நடிகர், நாடகாசிரியர், இலக்கிய ஆர்வலர் இளங்கோ குமரவேல் நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.  எழுத்தாளர் சித்ரா ரமேஷின் ‘உத்ராயணம்’ நாவல், எழுத்தாளர் ஷா நவாஸின் ‘ருசி பேதம்’ கட்டுரைத் தொகுப்பு, எழுத்தாளர் மகேஷ்குமாரின் ‘அடையாளங்களுக்கு அப்பால்’ கவிதை நூல் ஆகியவை வெளியீடு காண்கின்றன.

நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு இரவு உணவுடன் நிறைவடையும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்