தமிழ் இலக்கிய விரிவுரையாளரும் எழுத்தாளருமான முனைவர் மா.இராஜிக்கண்ணு எழுதிய மூன்று தமிழ் நூல்களின் வெளியீட்டு விழா சனிக்கிழமை (பிப்ரவரி 15) நடைபெறவுள்ளது.
அந்நிகழ்ச்சி தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் 5ஆம் தளத்திலுள்ள பாசிபிலிட்டி அறையில் மாலை 5 முதல் இரவு 7 மணி வரை நடைபெறும்.
‘நெஞ்சிலாடும் நினைவலைகள்’, ‘கவிதை அரும்பு’, ‘சுயமரியாதைச் சுடரொளி மானமிகு சே நடராசன்’ ஆகிய தலைப்புகளில் மூன்று நூல்கள் வெளியிடப்படவுள்ளன.
பேராசிரியர் முனைவர் அ.வீரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க இருக்கிறார்.
வரவேற்புரையை திரு இரா.அருண்மொழியும் சிறப்புரையை இணைப் பேராசிரியர் முனைவர் சீதாலட்சுமியும் வழங்குவார்கள். நூல் ஆய்வுரையை முனைவர் கி.திருமாறனும் திரு க.பூபாலனும் வழங்குவார்கள்.
மூத்த தமிழாசிரியர் பி.சிவசாமி முதல் நூலைப் பெறுவார்.
நிகழ்ச்சி குறித்த மேல்விவரங்களுக்கும் உங்கள் வருகையை உறுதிசெய்யவும் முனைவர் இராஜிக்கண்ணுவை 9800 7979 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும். மாலை 4.45 மணிக்குள் இருக்கையில் அமரவும்.