சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் மலேசிய எழுத்தாளரும் ஜோகூர் தமிழ் இலக்கியக் கழகத் தலைவருமான முனைவர் தமிழ்மணி சி.வடிவேலு இயற்றிய ‘சித்தத்துள் சித்தமாய்’ சிறுகதைத் தொகுப்பு நூல் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) அறிமுகம் காண்கிறது.
தேசிய நூலகக் கட்டடத்தின் ஐந்தாவது தளத்திலுள்ள இமேஜினேஷன் அறையில் மாலை 6 மணிக்கு நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். எழுத்தாளர் கழகத்தின் செயலாளர் பிரேமா மகாலிங்கம் வரவேற்புரை ஆற்ற, தலைவர் நா.ஆண்டியப்பன் விழாவிற்குத் தலைமையேற்கிறார்.
சிங்கைத் தமிழ் இலக்கியக் களத்தின் தலைவர் முனைவர் இரத்தின வேங்கடேசன் நூலை அறிமுகம் செய்து உரையாற்றுவார்.
ஜோகூர் பாருவின் தெமங்கோங் இப்ராகிம் ஆசிரியர் கல்விக் கழகத்தின் மேனாள் தலைவர் தமிழ்ச்சுடர் இராம.சேதுபதி, கல்வியாளரும் எழுத்தாளருமான திரு பொன்.சுந்தரராசு இருவரும் வாழ்த்துரை ஆற்றுவர். நூலாசிரியர் முனைவர் தமிழ்மணி சி.வடிவேலு ஏற்புரையும் நன்றியுரையும் ஆற்றுவார்.
எழுத்தாளர் கழகச் செயலவை உறுப்பினர் திருவாட்டி ஷோபா குமரேசன் நிகழ்ச்சி நெறியாளராகச் செயலாற்றுவார்.
இலக்கிய ஆர்வலர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் கதைக்கள உறுப்பினர்கள் ஆகிய அனைவரையும் இவ்விழாவிற்கு எழுத்தாளர் கழகமும் முனைவர் தமிழ்மணி சி.வடிவேலுவும் அன்புடன் அழைக்கின்றனர்.