மு.கு. இராமச்சந்திரா புத்தகப் பரிசு 2025

2 mins read
82fb35c6-a1d2-4d84-baf3-178d83c70f3e
அமரர் மு.கு.இராமச்சந்திரா நினைவு நாளை ஒட்டி வரும் ஆகஸ்ட் மாதம் பரிசளிப்பு விழா நடைபெறும். - படம்: பிக்சாபே

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2010 முதல் நடத்தும் ஆனந்த பவன் அமரர் மு.கு.இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி, இவ்வாண்டு வழக்கம்போல் நடைபெற இருக்கிறது.

அமரர் மு.கு.இராமச்சந்திரா நினைவு நாளை ஒட்டி வரும் ஆகஸ்ட் மாதம் பரிசளிப்பு விழா நடைபெறும். சிறுகதை, கவிதை, கட்டுரை என மூன்று துறைகளுக்குச் சுழல் முறையில் பரிசு வழங்கப்பட்டு வந்தது. சென்ற ஆண்டு கட்டுரை நூலுக்குப் பரிசு வழங்கப்பட்டது. இந்த வரிசையில் புதினமும் சேர்த்துக்கொள்ளப்படும் என்று சென்ற ஆண்டு அறிவித்தோம்.

முதல் முறையாகப் புதினம் சேர்த்துக்கொள்ளப்படுவதால் 01.01.2017 முதல் 31.12.2024 வரை முதல் பதிப்பாகப் பதிப்பிக்கப்பட்ட நாவல்களின் 4 படிகளை குடியுரிமை அல்லது நிரந்தரவாசத் தகுதி பெற்ற எழுத்தாளர்கள் இந்தப் போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நூல்களை அனுப்பி வைக்க இறுதி நாள் 28.02.2025. எழுத்தாளர்கள் குறுநாவல்களையும் அனுப்பி வைக்கலாம்.

நூல்களை அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி: Association of Singapore Tamil Writers, BLK 723 #13-149, Yishun St 71, Singapore 760723. அல்லது செயலாளர் பிரேமா (9169 6996) Aaria Creations, 32 அப்பர் டிக்சன் சாலை, சிங்கப்பூர் 207491 எனும் முகவரியில் நேரில் சென்றும் கொடுக்கலாம்.

சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் இருந்து மூன்று நடுவர்கள் சிறந்த நூலைத் தேர்ந்தெடுக்க உதவுவார்கள். அந்த நூலுக்கு 3,000 வெள்ளி ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்படும். போட்டிக்கான விதிகளையும் விண்ணப்பப் படிவத்தையும் www.singaporetamilwriters.com எனும் எழுத்தாளர் கழகத்தின் இணையத் தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேல்விவரங்களுக்கு எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் (9784 9105), செயலாளர் பிரேமா ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம்.

செய்தி: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
குறிப்புச் சொற்கள்