பிரபல ஜோயாலுக்காஸ் வைர நகைக் கண்காட்சி தொடக்கம்

பிரபல ஜோயாலுக்காஸ் வைர நகைக் கண்காட்சி தொடக்கம்

1 mins read
f3cac779-caa3-407d-a754-0c5519ef3126
சிங்கப்பூருக்கான இந்தியத் துணைத் தூதர் பூஜா தில்லு, (வலமிருந்து 2வது), கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். - படம்: ஜோயாலுக்காஸ்

ஜோயாலுக்காஸ் நகைக்கடையின் பிரபல ‘பிரில்லியன்ஸ்’ வைர நகைக் கண்காட்சி, எண் 412 சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள அதன் முதன்மைக் கடையில் தொடங்கியுள்ளது.

சிங்கப்பூர், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், ஓமான், கத்தார், பக்ரேன், சவூதி அரேபியா, குவைத், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட 11 நாடுகளிலும் இந்தக் கண்காட்சி இடம்பெறும்.

கண்காட்சியில் புதிதாக இரண்டு வைர அணிகலன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சமகாலத் தழுவல் கொண்ட ‘ஈவோரா’ நகைத் தொகுப்பு, மகாலட்சுமி தேவியின் வடிவம் பொருந்திய பாரம்பரிய, இந்து நம்பிக்கையை எடுத்துக்கூறும் ‘பத்மலட்சுமி’ நகைத் தொகுப்புகளை பொதுமக்கள் கண்காட்சியில் காணலாம்.

S$2,500யும் அதற்கும் மேற்பட்ட மதிப்புள்ள அனைத்து வைர நகைகளை வாங்கும்போது வாடிக்கையாளர்கள் $100 ‘கேஷ்பேக்’ பெறலாம்.

மேலும், வைரப் பரிமாற்றத்திற்கு 100% மதிப்பையும் 916 பழைய தங்க நகைப் பரிமாற்றத்திற்கு 0% விலக்கையும் ஜோயாலுக்காஸ் நீட்டித்துள்ளது.

சிங்கப்பூருக்கான இந்தியத் துணைத் தூதர் பூஜா தில்லு, கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

“எங்கள் இரண்டு தனித்துவமான புதிய வைரத் தொகுப்புகள் சமகாலத் தனித்துவத்தையும் ஆழமாக வேரூன்றிய பாரம்பரியத்தையும் கொண்டாடுகின்றன,” என்றார் ஜோயாலுக்காஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் பால் ஆலுக்காஸ்.

‘பிரில்லியன்ஸ்’ வைர நகைக் கண்காட்சி பிப்ரவரி 8ஆம் தேதி வரை நடைபெறும். இயற்கையாகவே பெறப்பட்ட பல்வேறு வகை வைர, ரத்தின நகைகளைப் பொதுமக்கள் காணலாம்.

குறிப்புச் சொற்கள்