சிங்கப்பூரில் பவா செல்லதுரையின் பெருங்கதையாடல்

மே 30, மாலை 5 - 8 மணி

சிங்கப்பூரில் பவா செல்லதுரையின் பெருங்கதையாடல்

1 mins read
afd41ed0-0ecd-4949-8761-6aa5c1f84a8c
பெயர் பெற்ற கதைசொல்லியான பவா செல்லதுரை மே 30ஆம் தேதி சிங்கப்பூரில் கதை சொல்கிறார். - படம்: பவா செல்லதுரை

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கதைசொல்லியான பவா செல்லதுரை சிங்கப்பூரில் ஒரு பெருங்கதையாடலை நிகழ்த்த உள்ளார். சிறுகதை எழுத்தாளரான பவா செல்லதுரை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இயங்கியவர். 19 டி எம் சாரோனிலிருந்து, நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை, எல்லா நாளும் கார்த்திகை, பங்குக்கறியும் பின்னிரவுகளும் போன்ற நூல்களை அவர் எழுதியுள்ளார்.

அவரின் கதைசொல்லும் நிகழ்வுகள் பலராலும் வரவேற்கப்படுபவை.

சிறுகதைகள், நாவல்களை உணர்ச்சிபூர்வமாகச் சொல்வதில் பெயர்பெற்று விளங்குபவர் பவா செல்லதுரை.

நவீனத் தமிழிலக்கியத்தைப் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை வாசிப்பின் பக்கம் திருப்பியதில் அவரின் பேச்சுகளுக்கு முக்கியப் பங்குண்டு.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளிலும் அவரது கதைசொல்லும் நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

முதல்முறையாக அவரது பெருங்கதையாடல் சிங்கப்பூரில் நடக்க இருக்கிறது.

இம்முறை தமிழின் செவ்வியல் நாவல் ஒன்றைச் சொல்ல இருக்கிறார் பவா செல்லதுரை. என்ன நாவல் என்பதை நிகழ்ச்சியில் தெரிந்துகொள்ளலாம்.

பீட்டி சாலையில் அமைந்துள்ள உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் இம்மாதம் (மே) 30ஆம் தேதி மாலை 5 மணி முதல் எட்டு மணி வரை நிழ்ச்சி நடைபெறும்.

மாணவர்கள், இலக்கிய ஆர்வமுள்ளவர்களுக்கு நிச்சயம் நல்ல அனுபவமாக, நீண்ட நாள் மனத்தில் தங்கும் விதமாக அது அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

அனுமதி இலவசம்.

மேல் விவரம் அறிய: கதிர் 94279480 / பானு 97806673

குறிப்புச் சொற்கள்