விஷவண்டு கொட்டி மாணவியர் உட்பட 15 பேர் காயம்

விஷவண்டு கொட்டி மாணவியர் உட்பட 15 பேர் காயம்

படம்: தினமணி

05 Nov 2026 - 6:20 pm

1 mins read

கும்பகோணம்: கும்பகோணம் அருகே விஷ வண்டுகள் கொட்டியதை அடுத்து மாணவிகள் 13 பேரும் பெரியவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோயில் சாலையில் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது.

அந்தப் பள்ளி அருகில் இருந்த மரத்திலிருந்து விஷ வண்டுகள் திடீரெனப் பறந்து வந்து மாணவிகள் மற்றும் அந்தப் பகுதியில் நடந்து சென்றவர்களைக் கொட்டியது.

அதனால், மாணவிகள் 13 பேரும் பெரியவர்கள் இருவரும் மயக்கம் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து 15 பேரும் நாச்சியார்கோவில் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்