புதுடெல்லி: இந்திய கல்வி நிறுவனங்களுக்கு உலக அரங்கில் பலத்த வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், அனைத்துலக அளவில், கல்வித் தரத்தின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தரப்பட்டியலில் இந்திய தலைநகர் புதுடெல்லியில் இயங்கி வரும் ஐஐடி நிறுவனம் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.
2026ஆம் ஆண்டுக்கான ‘கியூஎஸ்’ (QS) வெளியிட்டுள்ள உலகத் தரவரிசையில் மொத்தம் 54 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. அவற்றுள் இந்திய அளவில் டெல்லியின் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) முன்னிலையில் உள்ளது. எனினும், உலக அளவில் 123வது இடத்தையே பிடித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, சாதனை செயல்திறனை அடைந்து, உலகளாவிய பட்டியலில் 54 நிறுவனங்களைக் கொண்டு, உலக அளவில் நான்காவது அதிக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
ஐஐடி டெல்லியைத் தொடர்ந்து ஐஐடி மும்பை 129வது இடத்திலும், ஐஐடி சென்னை 180வது இடத்திலும் ஐஐட கோரக்பூர் 215 இடத்திலும் உள்ளன.
மற்ற சிறந்த நிறுவனங்களில் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி) 219வது இடத்திலும் ஐஐடி கான்பூர் 222வது இடத்திலும் உள்ளன.
டெல்லி பல்கலைக்கழகமும் முதல் 350 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது. இந்திய கல்வி நிறுவனங்களுக்கு உலக அரங்கில் பலத்த வரவேற்பு உள்ளது.

