ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இவ்வாண்டின் ‘மிஸ் வேர்ல்ட்’ என அழைக்கப்படும் உலக அழகி போட்டி சனிக்கிழமையன்று (மே 10) தொடங்கி இம்மாதம் 31ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
2024ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டி மும்பையில் நடைபெற்ற நிலையில், இவ்வாண்டுப் போட்டி ஹைதராபாத்தில் நடக்கிறது.
அப்போட்டியில் பங்கேற்பதற்காகப் பல்வேறு நாடுகளிலிருந்து 110 போட்டியாளர்கள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளதாகவும் மேலும் சிலர் வர உள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும் உலகெங்கிலும் இருந்து செய்தியாளர்களும் பிற பிரபலங்களும் இதில் கலந்து கொள்கின்றனர்.
ஹைதராபாத்தில் உள்ள கச்சிபவுலி உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமான தொடக்க விழாவுடன் உலக அழகியைத் தேர்ந்தெடுக்கும் போட்டிகள் தொடங்கவுள்ளன.
‘நோக்கத்துடன் கூடிய அழகு’ என்ற கருப்பொருளுடன் இவ்வாண்டுப் போட்டி நடக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நந்தினி குப்தா இந்தியா சார்பில் அப்போட்டியில் கலந்து கொள்கிறார்.

