தவெக எம்எல்ஏவிடம் பேரம்: சிங்கப்பூர் வர்த்தகருக்கு ‘லுக்-அவுட் நோட்டீஸ்’

தவெக எம்எல்ஏவிடம் பேரம்: சிங்கப்பூர் வர்த்தகருக்கு ‘லுக்-அவுட் நோட்டீஸ்’

2 mins read
c03614ec-5332-40bd-a052-5641b32d8326
தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  - படம்: என்டிடிவி

சென்னை: தவெக ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தொடரப்பட்ட வழக்கில் மூளையாகச் செயல்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் வர்த்தகர் லட்சுமண பெருமாளுக்கு எதிராக சென்னை காவல்துறையினர் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

சட்​டப்​பேர​வை​யில் பேர​வைத்தலை​வருக்கு எதி​ராக நம்​பிக்​கை​யில்லாத் தீர்​மானம் கொண்டு வரப்​பட்​டால் அதை ஆதரிக்க ரூ.35 கோடி பேரம் பேசப்​பட்​ட​தாக ஊத்​தங்​கரை தொகுதி தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா புகார் அளித்​திருந்​தார். அதன் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சி நரேஷ் ஆகியோர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ராஜசேகர், சேதுராஜன் ஆகிய மேலும் இருவர் கைதாகியுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கைதானவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்களில் ஒருசிலர் அளித்த தகவலின் அடிப்​படை​யில், முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி, அவரது சகோ​தரர் அசோக்​கு​மார் ஆகியோரை விசா​ரிக்க காவல்துறை அழைப்பாணை அனுப்​பிய நிலை​யில் இரு​வரும் முன்பிணை பெற்​றனர்.

கைதான ஒன்பது பேரின் வீடு​களில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் முக்​கிய ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. கைப்பேசியில் வந்த அழைப்புகளையும் அதிகாரிகள் ஆராய்ந்தனர்.

அப்போது, கைதானவர்களில் ஒருவர் சிங்கப்பூரைச் சேர்ந்த லட்சுமண பெருமாள் என்னும் வர்த்தகருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

லட்சுமண பெருமாள் சென்னை வந்து இவர்​களை சந்​தித்​துப் பேசி​ய​தாக​வும் கூறப்​படு​கிறது. எல்எல்ஏவுக்கு லஞ்சம் கொடுப்பது தொடர்பாக சென்னை கிண்​டி​யில் உள்ள பிரபல நட்​சத்​திர ஹோட்​டலில்அவ்ரகள் அனைவரும் தங்கி ரகசிய ஆலோ​சனை​கள் நடத்தியதும் தெரிய வந்​த​து.

இதையடுத்​து, லட்​சுமண பெரு​மாள் குறித்து காவல்துறையின் தனிப்​படையினர் விசா​ரணையை தீவிரப்​படுத்​தினர். அதுபற்றி அறிந்ததும் லட்​சுமண பெரு​மாள் சிங்​கப்​பூருக்கு தப்​பிச் சென்​றுவிட்டதாகக் கூறப்பட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மேலும், சிங்கப்பூரில் இருந்தபடியே தொழில்​நுட்ப உதவி​யுடன் சென்னை ஹோட்​டலின் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவு​கள் மற்​றும் வழக்​குக்குத் தொடர்​புடைய சில மின்னிலக்க ஆதா​ரங்​களை அழிக்க அவர் முயன்​ற​தாக விசாரணை அதிகாரிகள் கூறினர்.

அதனால் லட்சுமண பெருமாள் இந்தியாவில் இருந்தால் வெளி​நாடு​களுக்கு மேலும் தப்​பிச் செல்​லாமல் தடுக்​க​வும் இந்​தி​யா​வுக்​குள் நுழைந்​தால் உடனடியாகக் கைது செய்​ய​வும் சென்னை காவல்துறையினர் அவருக்கு எதி​ராக அனைத்து விமான நிலை​யங்​களுக்​கும் ‘லுக்​-அவுட் நோட்​டீஸ்’ பிறப்​பித்​துள்​ளனர்.

அத்துடன், அவரது கைப்பேசிப் பயன்​பாடு மற்​றும் இருப்​பிடத்தை இணையக் குற்றத் தடுப்புக் காவல்துறையினர் தொடர்ந்து கண்​காணித்து வரு​கின்​றனர்.

குறிப்புச் சொற்கள்