கோல்கத்தா: நர்கெல்டங்கா பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் பெரிய தீச்சம்பவம் ஏற்பட்டது.
சனிக்கிழமை இரவு 10 மணி வாக்கில் ஏற்பட்ட இச்சம்பவத்தில் ஒருவர் மாண்டார், மேலும் குறைந்தது 30 குடிசைகள் தீயில் கருகின.
மாண்டவரின் பெயர் ஹபிபுல்லா என்றும் அவருக்கு 60 வயது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தீயில் கருகிய குடிசையில் இருந்து அவரின் உடல் மீட்கப்பட்டது.
5 மணி நேரத்திற்கு மேல் போராடிய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிவாக்கில் தீயை அணைத்தனர்.
தீயில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்குப் பெரிதாக எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
தீச்சம்பவம் காரணமாக அந்தக் குடிசைப் பகுதியில் 200க்கும் அதிகமானவர்கள் தங்குமிடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

