தமிழகத்துக்கு காவிரி நீர்: ஒழுங்​காற்​றுக் குழு உத்தரவு

தமிழகத்துக்கு காவிரி நீர்: ஒழுங்​காற்​றுக் குழு உத்தரவு

2 mins read
72dd5373-4fb2-4250-b41b-5c411feabd81
தென்​மேற்குப் பருவமழை பொய்த்​த​தால் கிருஷ்ண​ராஜ ​சாகர், கபினி ஆகிய அணை​களில் 50 விழுக்காடு அளவுக்கு மட்​டுமே நீர் இருப்பு உள்​ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். - கோப்புப் படம்: பெங்களூர் மிரர்

பெங்களூரு: தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு 3,500 கனஅடி வீதம் காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்​காற்​றுக் குழு உத்தரவிட்டது.

டெல்​லி​யில் நடைபெற்ற ஒழுங்​காற்​றுக் குழுக் கூட்​டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தமிழகத்துக்கு நீரைத் திறந்​து​விட இயலாது என கர்நாடகா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கர்​நாட​கா, தமிழ்​நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்​களைச் சேர்ந்த நீர்ப்​பாசனத் துறை அதிகாரி​கள் ஒழுங்​காற்​றுக் குழுக் கூட்​டத்தில் பங்​கேற்​றனர்.

அப்போது, உச்​ச நீ​தி​மன்​றத்​தின் தீர்ப்பின்படி காவிரி​யில் தமிழகத்​திற்கு வழங்க வேண்டிய நீரை கர்​நாடகா முறையாக வழங்​க​வில்​லை எனத் தமிழக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இதனால் பாசனத்​திற்​காக மேட்​டூர் அணை இன்​னும் திறக்​கப்​பட​வில்​லை என்றும் கர்​நாடக அரசு தமிழகத்​துக்கு வழங் வேண்​டிய நீரை உடனடி​யாகத் திறந்​து​விட உத்​தர​விட வேண்​டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியது.

ஆனால் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்த கர்நாடக அதிகாரிகள், கர்​நாட​கா​வில் நடப்பாண்​டில் தென்​மேற்குப் பருவமழை பொய்த்​த​தால் கிருஷ்ண​ராஜ ​சாகர், கபினி, ஹாரங்​கி, ஹேமாவதி ஆகிய அம்மாநில அணை​களில் 50 விழுக்காடு அளவுக்கு மட்​டுமே நீர் இருப்பு உள்​ளதாகச் சுட்டிக்காட்டினர்.

மேலும், பெங்​களூரு மாநகரின் குடிநீர்த் தேவைக்கு மட்​டுமே நீர் இருப்​பில் உள்​ளது என்றும் இத்தகைய சூழலில் தமிழகத்​துக்குக் காவிரி நீரைத் திறந்​து​விட இயலாது என்றும் கர்நாடகா கைவிரித்தது.

எனினும், கர்நாடகாவின் வாதத்தை ஒழுங்​காற்றுக் குழு ஏற்க மறுத்துவிட்டது.

உச்ச நீதிமன்ற உத்​தர​வின்​படி, தமிழகத்​துக்குக் காவிரி நீரைத் திறந்து​விட வேண்​டும். மழைப் பற்​றாக்​குறை காரண​மாக அணைகளில் உள்ள நீர் இருப்​பின் அளவுக்கு ஏற்​ப நீரைப் பங்கிட்​டுக்கொள்ள வேண்​டும் என்றும் அக்குழு அறிவுறுத்தியது.

“கிருஷ்ண​ராஜ​ சாகர், கபினி ஆகிய இரு அணை​களில் இருந்​தும் தமிழகத்​துக்கு அடுத்த 15 நாள்​களுக்கு நாள்தோறும் 3,500 கன அடி நீரைத் திறந்​து​விட வேண்டும். இதனை ஜூலை 29ஆம் தேதி காலை 8 மணி முதல் இருமாநில எல்​லை​யான பிலிகுண்​டுலு அளவீட்டு நிலை​யத்​தில் இருந்து தமிழகத்​துக்கு நீர் செல்​வதை உறுதிசெய்ய வேண்​டும்,” என ஒழுக்காற்றுக் குழு தனது உத்தரவில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்த உத்தரவு கர்நாடக அரசுத் தரப்புக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாகத் தெரிகிறது.

அம்மாநில முதல்​வர் டி.கே. சிவகு​மார், நீர்ப்​பாசனத்​துறை அமைச்​சர் ராமலிங்க ரெட்​டி, நீர்ப்​ பாசனத்​துறை அதி​காரி​களு​டன் அவசர ஆலோ​சனை மேற்​கொண்​டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமலிங்க ரெட்டி, மழை பெய்​யாத​தால் கர்நாடகாவில் குடிநீருக்குத் தட்​டுப்​பாடு ஏற்பட்​டுள்​ளது என்றார்.

இந்தச் சூழலில் தமிழ்​நாட்​டுக்கு நீரைத் திறந்​து​விட இயலாது என்றும் காவிரி நீர் ஒழுங்​காற்றுக் குழு​வின் உத்​தரவை எதிர்த்துக் கா​விரி மேலாண்மை ஆணையத்தில்​ முறை​யிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்