புதுடெல்லி: இந்தியாவின் மத்திய அரசாங்கம், வியாழக்கிழமையன்று (அக்டோபர் 3) புதிய வேலைப் பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியது.
அதன்கீழ் 21லிருந்து 24 வயதுக்கு உட்பட்டோருக்கு ஆண்டுதோறும் 66,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.
ஐந்தாண்டுகளில் 10 மில்லியன் இளையர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது இலக்கு. இத்திட்டத்தைச் செயல்படுத்த எட்டு பில்லியன் ரூபாய் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2ஆம் தேதியன்று தொடங்கவிருக்கும் இத்திட்டத்தால் தற்போதைய நிதியாண்டில் 125,000 பேர் பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கத் தரப்பு தகவல் தெரிவித்தது.
நடப்பு நிதியாண்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையவுள்ளது. இந்த வேலைப் பயிற்சித் திட்டம் குறித்து இவ்வாண்டுக்கான இந்திய வரவுசெலவுத் திட்ட அறிவிப்பின்போது தெரிவிக்கப்பட்டது.
இதன்கீழ் பெரிய நிறுவனங்கள் வேலைப் பயிற்சி வாய்ப்புகளை வழங்கும். திட்டத்தில் பங்கேற்போருக்கு காப்புறுதியும் வழங்கப்படும்.
www.pminternship.mca.gov.in இணையத்தளத்தின் மூலம் புதிய வேலைப் பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்தியாவின் வர்த்தக விவகார அமைச்சு அந்த இணையத்தளத்தை உருவாக்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
திட்டத்தின்கீழ் வேலைப் பயிற்சி மேற்கொள்வோருக்கு ஆண்டுதோறும் 5,000 ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுவதோடு ஒருமுறை 6,000 ரூபாய் மானியமும் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.