புதுடெல்லி: இந்தியாவுக்கு அரிய வகை தனிமங்கள், காந்தங்களின் ஏற்றுமதிக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளைச் சீனா அகற்றியுள்ளது.
இந்தியா வந்திருக்கும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடனான பேச்சுவார்த்தைகளை அடுத்து கட்டுப்பாட்டுகள் நீக்கப்பட்டன.
சீனாவிலிருந்து அரிய தனிமங்கள், தொடர்புடைய காந்தங்கள் ஏற்றுமதிக்கு சிறப்பு ஏற்றுமதி உரிமங்களைக் கட்டாயமாக்கி, கடந்த ஏப்ரலில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மின்சார மோட்டார், பிரேக்கிங் அமைப்புமுறை, அறிதிறன்பேசி, ஏவுகணை தயாரிப்பில் இவை முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றுக்காகச் சீனாவையே இந்தியா சாா்ந்துள்ளது.