வெளிநாட்டிலிருந்து இந்திய ஜனநாயகத்தைச் சீர்குலைக்க சதி: பிரிட்டன் இந்திய அமைப்புகள்

வெளிநாட்டிலிருந்து இந்திய ஜனநாயகத்தைச் சீர்குலைக்க சதி: பிரிட்டன் இந்திய அமைப்புகள்

படம்: இந்திய வெளிநாட்டு காங்கிரஸ்

11 Nov 2026 - 7:08 pm

2 mins read

லண்டன்: இந்தியாவின் ஜனநாயக, அரசமைப்பு நிறுவனங்களை இலக்கு வைத்து வெளிநாடுகளில் திட்டமிட்டு நடத்தப்படும் பிரசாரங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி, பிரிட்டனிலுள்ள 50 இந்திய அமைப்புகள் இந்திய அதிபர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளன.

அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம், நாடாளுமன்ற சதுக்கத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம், நாடாளுமன்ற சதுக்கத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. - படம்: நேஷனல் ஹெரால்ட்

கடந்த அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம், நாடாளுமன்ற சதுக்கத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

பிரிட்டனில் செயல்படும் இந்திய மாணவர் சங்கம், தெற்காசிய ஒற்றுமைக் குழு, இந்திய வெளிநாட்டு காங்கிரசின் இளைஞர் அணி உள்ளிட்ட அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட அந்தப் போராட்டங்கள், அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆர்ப்பாட்டங்கள் கருத்துச் சுதந்திரம் சார்ந்தது அல்ல என்றும், இந்தியாவின் இறையாண்மையையும் ஜனநாயக மாண்புகளையும் வெளிநாட்டு மண்ணில் இருந்து குலைக்கும் சதி என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாகிஸ்தான், பங்ளாதேஷைச் சேர்ந்த சில அமைப்புகளும், காலிஸ்தான் ஆதரவுப் பிரிவினைவாதக் குழுக்களும் அந்த ஆர்ப்பாட்டங்களிலும் இந்தியாவுக்கு எதிரான முன்னெடுப்புகளிலும் தீவிரமாகப் பங்கேற்றிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவிரவாத அல்லது பிரிவினைவாத சக்திகளுடன் அரசியல், பரப்புரைக் குழுக்களுக்கு தொடர்போ, ஒருங்கிணைப்போ அல்லது வெளிநாட்டு நிதி ஆதரவோ உள்ளதா என்பதை இந்தியப் புலனாய்வு அமைப்புகள் விரிவாக ஆராய வேண்டும் என்று அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

மேலும், பிரிட்டனின் ஜனநாயக சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சமூகங்களுக்கு இடையிலான அமைதியான வாழ்வைச் சீர்குலைக்க எவரையும் அனுமதிக்கக்கூடாது என்று இந்திய அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

குறிப்புச் சொற்கள்