அமராவதி: ஒர்னாப் புயல் கரையைக் கடந்த சூழலில், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கூட்டாக சுமார் 87,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
புயல் பாதிப்புகளால் ஆந்திரத்தில் மூவர் உயிரிழந்தனர்.
வங்கக்கடலில் உருவான அதிதீவிர ‘அர்னாப்’ புயல், ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா, ஏனாம் பகுதிகளுக்கு இடையே புதன்கிழமை (அக்டோபர் 28) காலை முழுமையாகக் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 125 முதல் 135 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசியதால், கடலோர மாவட்டங்கள் பலத்த சேதத்தைச் சந்தித்துள்ளன.
புயலின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்துவந்த 180,000க்கும் மேற்பட்ட மக்கள் முன்னெச்சரிக்கையாகப் பாதுகாப்பான நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.
தேசிய, மாநிலப் பேரிடர் மீட்புப் படைகள் களத்தில் இறக்கப்பட்டு தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டன.
புயல் கரையைக் கடந்தபோது வீசிய பலத்த காற்றால் விசாகப்பட்டினம், காக்கிநாடா, கோனசீமா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மரங்களும் மின் கம்பங்களும் வேரோடு சாய்ந்தன. இதன் காரணமாகப் பல பகுதிகளில் மின் விநியோகம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு நடவடிக்கையாக விமானச் சேவைகள், ஐம்பதுக்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.
மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘அர்னாப்’ புயலால் தமிழகத்துக்கு நேரடிப் பாதிப்பு எதுவுமில்லை என்றாலும், வட கடலோர மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது.
கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
