திரை நட்சத்திரங்களால் தாக்கம் ஏற்படுத்த முடியாது: பியூஷ் கோயல்

திரை நட்சத்திரங்களால் தாக்கம் ஏற்படுத்த முடியாது: பியூஷ் கோயல்

1 mins read
74348e2e-422c-4531-9e96-1bd57aa797aa
பியூஷ் கோயல், விஜய். - படங்கள்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

புதுடெல்லி: தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி கடினமானதல்ல என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊழலில் திளைத்த திமுக அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி அலை வீசுவதாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

திரைப்பட உச்ச நட்சத்திரங்கள் பலர் தேர்தலில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் போனதை தமிழகம் ஏற்கெனவே பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பதும் அதை வாக்குகளால் மாற்றுவதும் வெவ்வேறானது என்று தெரிவித்துள்ளார்.

ஒரு நிர்வாகியாக மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும் என்றும் நடிகர் கமல்ஹாசன் போன்ற நட்சத்திரங்கள் தேர்தலில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்றும் இத்தகைய காரணங்களால் நடிகர் விஜய்யை ஈர்க்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் முற்றிலும் தமிழ் விரோத, தேச விரோத நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், திமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாகத் தெரிவதாக கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்