தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெல்லி மருத்துவமனையில் தீ: புதிதாகப் பிறந்த 20 குழந்தைகள் பத்திரமாக மீட்பு

1 mins read
51c7ee84-e85b-4acf-9d50-ef4e8fbdb749
படம்: பிக்சாபே -

டெல்லியின் மேற்குப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் தீ ஏற்பட்டது. அதில் புதிதாகப் பிறந்த 20 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தீச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ஒன்பது குழுக்கள் தீயை அணைக்க மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் டெல்லி தீயணைப்பு சேவையின் தலைவர் அத்துல் கார்ங் தெரிவித்தார்.

தீச்சம்பவம் வை‌‌‌ஷாலி காலனியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1:35 மணிக்கு ஏற்பட்டதாக கார்ங் தெரிவித்தார்.

நான்கு மாடி கட்டடத்தின் முதல் தளத்தில் மருத்துவமனை உள்ளது.

மீட்கப்பட்ட குழந்தைகள் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் அவர்கள் நான்கு வெவ்வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மூன்று குழந்தைகள் நல்ல உடல்நிலையில் இருந்ததால் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் கார்ங் தெரிவித்தார்.

நான்கு மாடி கட்டடத்தின் கீழ் தளத்தில் உள்ள ஒரு கடையில் தீ ஏற்பட்டதாகவும் பின் அது மேல் மாடிகளுக்குப் பரவியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்