தெலுங்கானாவைச் சீனா, ஜப்பானுக்கு நிகராகக் கட்டியெழுப்புவதே இலக்கு: ரேவந்த் ரெட்டி

1 mins read
a3887725-4464-4876-99ef-3ecc639528fb
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி. - ப்டம்: ரேவந்த் ரெட்டி ‘எக்ஸ்’ தளம்

ஹைதராபாத்:  சீனா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு நிகராகத் தெலுங்கானாவின் கட்டமைப்பை மேம்படுத்துவதே எங்கள் இலக்கு எனத் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

‘2047க்​குள் தெலுங்​கா​னாவை வளர்ச்சி பெற்ற மாநில​மாகக் கட்டியெழுப்புவோம்’ என்ற பெயரில் தொலைநோக்​குத் திட்​டத்தைத் திரு ரேவந்த் ரெட்டி டிசம்பர் 1ஆம் தேதி ஹைத​ரா​பாத்​தில் வெளி​யிட்​டார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர், “2047க்​குள் தெலுங்கானாவை மிக​வும் வளர்ச்சி பெற்ற மாநில​மாக மாற்​று​வதே எங்களது இலக்​கு. அதற்​கான முதல்​படி​தான் இந்த ‘2047 தொலைநோக்குத் திட்​டம்’” என்றார்.

மேலும், “சீனா, ஜப்​பான், தென்கொரி​யா, சிங்​கப்​பூர் போன்ற நாடு​கள் வளர்ச்சி பெற்று இருப்​ப​தைப் போலவே தெலுங்​கா​னாவை மாற்​ற இந்தத் திட்​டத்தை உரு​வாக்​கி​யுள்​ளோம். ஆசிய பொருளியல் வல்​லரசு நாடு​களுக்கு நிகராகத் தெலுங்​கானா தனது அளவு​கோலை நிர்​ண​யித்து வரு​கிறது. இந்தியாவின் வளர்ச்சியில் 10% தெலுங்​கா​னா​விலிருந்து செல்ல வேண்டும் என்ற நோக்​கத்​தில் இந்தத் திட்டத்தைத் தயாரித்​துள்​ளோம்,” எனத் தெலுங்கானா முதல்வர் கூறினார்.

இத்திட்​டம் டிசம்பர் 8,9ஆம் தேதி​களில் ஹைத​ரா​பாத்​தில் நடை​பெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்​டில் அதி​காரபூர்​வ​மாக அறி​முகம் செய்யப்​படும்.

நிதி ஆயோக், இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் ​(ஐஎஸ்​பி) ஆகிய​வற்​றுடன் இணைந்து இந்​தத் திட்டம் விரி​வாகத் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது.

குறிப்புச் சொற்கள்